மலேசியாவில் இருந்து கடந்த 8ஆம் தேதி காணாமல் போன விமானத்தை அந்த விமானத்தை செலுத்திய பைலட்டுக்கள்தான் கடத்தியுள்ளார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
விமான பைலட் Zaharie Ahmad Shah, விமானத்தில் கிளம்புவதற்கு முந்தைய நாள் சிறையில் இருக்கும் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து பேசியுள்ளார். மேலும் அன்று அவர் நாட்டில் சுதந்திரம் மரணம் அடைந்துவிட்டது என்று பொருள்படும் “Democracy is Dead” என்ற வார்த்தைகள் அடங்கிய டீ சர்ட் அணிந்திருந்தார் என்றும், அரசு மீது அவருக்கு கடுமையான அதிருப்தி இருந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.
மேலும் விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் விமான பைலட்டின் மனைவி மற்றும் அவர்களுடைய 3 குழந்தைகளும் தலைமறைவாகி உள்ளனர். அவர்கள் மலேசியாவில்தான் இருக்கின்றார்களா? அல்லது வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டார்களா? என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது. மேலும் தற்போது சிசிடிவி கண்காணிப்பு வீடியோவும் வெளிவந்துள்ளது. அதில் விமான பைலட் எவ்வித பதட்டமும் இல்லாமல் சாதாரணமாக சோதனக்கு ஒத்துழைப்பு தந்திருப்பது தெரிய வந்துள்ளது.
கடத்தப்பட்ட விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.