கேரள அரசு உதவி செய்ய தயார்! 17 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து முதல்வர் பினராயி விஜயன் தகவல்
கோவை மேட்டுப்பாளையம் அருகே 4 வீடுகள் இடிந்து முதலில் 7 பேர் பலியானதாகவும், அதன்பின் 10 பேர் பலியானதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி 17 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இன்னும் இடிபாடுகள் அகற்றப்பட்டு கொண்டிருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது
இந்த நிலையில் கோவை மேட்டுப்பாளையம் அருகே 4 வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழந்ததற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கேரள அரசு தயாராக உள்ளதாக பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கோவை சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்களே இன்னும் சிலர் இரங்கல் தெரிவிக்காததோடு, கேரள அரசின் சார்பில் இரங்கல் தெரிவித்ததோடு, உதவி செய்யவும் தயார் என முதல்வரின் அறிவிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
We are saddened by the loss of life, livelihoods and property due to heavy rains in Tamil Nadu. My deepest condolences to the bereaved families. We express our solidarity to the affected and stand ready to support them.
— Pinarayi Vijayan (@pinarayivijayan) December 2, 2019