தேனிலவு முடிந்து நாடு திரும்பினார் இளவரசியின் தங்கை

தேனிலவு முடிந்து நாடு திரும்பினார் இளவரசியின் தங்கை

இங்கிலாந்து நாட்டின் இளவரசி கேத் மிடில்டனின் தங்கை பீப்பா மிடில்டனுக்கும் ஜேம்ஸ் மாத்யூஸ் என்பவருக்க்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. பின்னர் இருவரும் இத்தாலியில் உள்ள ஆடம்பர ரிசார்ட் ஒன்றுக்கு தேனிலவுக்காக சென்றனர். இந்த நிலையில் நேற்று தேனிலவை முடித்து கொண்டு புதுமண தம்பதிகள் தனி விமானம் மூலம் நாடு திரும்பினர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் இரண்டாவது தேனிலவுக்காக ஆஸ்திரேலியா நாட்டின் பெர்த் நகருக்கு இருவரும் செல்கின்றனர். அவர்களை கேத் மிடில்டன் இன்று வழியனுப்பி வைக்கின்றார்.

பெர்த் நகரில் மூன்று நாட்கள் தங்கும் இந்த புதுமண தம்பதிகள் பின்னர் இங்கிலாந்து திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply