பிறந்த நாள் எப்போது கொண்டாட வேண்டும் தெரியுமா?

Cute-Baby-Graphics

நாம் பிறந்த ஆங்கில தேதி அல்லது தமிழ் தேதியில் பிறந்தநாள் கொண்டாடக் கூடாது. நாம் பிறந்த சந்திரமான மாதம் மற்றும் நட்சத்திர நாளில்தான் பிறந்தநாள் கொண்டாடவேண்டும்.

பஞ்சாங்கங்களில் சைத்ர, வைசாக, பால்குன என சந்திரமான மாதங்களைக் காணலாம். தமிழ் வருட பங்குனி மாத அமாவாசை முடியும் நேரத்தில் சந்திரமான சைத்ர மாதம் தொடங்கும். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த அமாவாசைகளில் அடுத்தடுத்த மாதங்கள் தொடங்கும். இந்த சந்திரமான மாதத்தையும் ஜனன நட்சத்திரத்தையும் ஜாதகரின் ஜாதகத்தில் குறித்துத் தருவது புண்ணியமாகும். சில நேரங்களில், ஒரே தமிழ் மாதத்தில் இரண்டு அமாவாசைகள் ஏற்பட்டு ஒரே பெயரில் இரண்டு சந்திரமான மாதங்கள் ஏற்பட்டுவிடும். இதில் முதல் மாதத்தை அதிக மாதம் என்றும், மற்றொன்றை நிஜ மாதம் என்றும் சொல்வர். இந்நிலையில் நிஜமாதத்தில் வரும் ஜனன நட்சத்திர தினத்தில் பிறந்தநாள் கொண்டாட வேண்டும்.

மேலும் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். நமது ஜனன நட்சத்திரம் முதல் நாள் தொடங்கி மறு நாள் வரை இருக்க வாய்ப்பு உண்டு. இந்த நிலையில், எந்த நாளில் சூரிய உதயம் முதற்கொண்டு 2 மணி, 24 நிமிடங்கள் வரை ஜனன நட்சத்திரம் உள்ளதோ, அந்த நாளில் பிறந்தநாள் கொண்டாடவேண்டும். பிறந்தநாள் விழா, வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி அல்ல. அந்த விண்ணுக்கும் நம் உயிருக்கும் உள்ள தொடர்பை புதுப்பித்துக்கொள்ளும் ஒரு சடங்கு. இந்த நாளில் பெற்றோர், பெரியோரிடம் ஆசி பெறுதல், புனித இடங்களுக்குச் சென்று வருதல், தான தர்மம் செய்தல், பறவைகள், விலங்குகள் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு தானம் வழங்குதல் போன்ற தர்ம காரியங்களைச் செய்ய வேண்டும். அவர்கள் வயிறும் மனமும் குளிர்ந்தால், நமது வாழ்வும் வளமும் வளரும் என்பது உறுதி. மேலும் இந்நாளில் விநாயகர் பூஜை, விஷ்ணு பூஜை, பகவதி சேவை செய்ய வேண்டும். மாணவர்கள் சரஸ்வதி பூஜை, வித்ய கோபால மந்திர அர்ச்சனை, மிருத்யுஞ்ஜெயன பூஜை செய்ய வேண்டும். பிறந்த நாள் இன்னின்ன கிழமைகளில் அமைந்தால் இன்னின்ன பலன்கள் என்றொரு கருத்து உண்டு.

ஞாயிறு: நீண்ட தூர பயணம்

திங்கள்: நல்ல உணவு கிடைத்தல், தான்ய விருத்தி

செவ்வாய்: உடல் நலம் பாதித்தல்

புதன்: கல்வியில் ஆர்வம்

வியாழன்: ஆடை- ஆபரணச் சேர்க்கை

வெள்ளி: அனைத்து வழிகளிலும் அதிர்ஷ்டம்.

சனி: பெற்றோருக்கு பாதிப்பு.

பிறந்த நாளில் உபநயனம், திருமணம், மருத்துவ சிகிச்சை, முதலியவற்றை செய்யக் கூடாது. பிறந்தநாள் எந்த கிழமைகளில் அமைகிறதோ அந்த கிழமைக்கு உரிய கிரகத்தை வழிபட, குறைகள் நீங்கி நிறைகள் கூடும்

Leave a Reply