ஒபாமாவை இரவு உடையில் வரவேற்ற குட்டி இளவரசர்

ஒபாமாவை இரவு உடையில் வரவேற்ற குட்டி இளவரசர்

President Barack Obama with First Lady Michelle Obama meets Prince George the Duke and Duchess of Cambridge watch at Kensington Palace in London April 22, 2016. (Official White House Photo by Pete Souza)

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று இரவு தனது பயணத்திட்டத்தில் ஒர் திடீர் மாற்றம் செய்து இங்கிலாந்து இளவரசரின் அரண்மனைக்கு விருந்திற்கு சென்றார். இரவு விருந்தில் கலந்து கொள்ள வந்த ஒபாமா மற்றும் அவரது மனைவி மிட்செல் ஒபாமா ஆகிய இருவரையும் குட்டி இளரவசர் ஜார்ஜ் வரவேற்பு அளித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

ஒபாமாவை வரவேற்பதற்காக தூங்காமல் ஜார்ஜ் விழித்து இருந்ததாகவும் இரவுநேர உடையான வெள்ளைநிற பைஜாமா கவுனையும் சாதாரண ரப்பர் செருப்பையும் அணிந்து அதிபரை அவர் கைகுலுக்கி வரவேற்றதாகவும் கூறப்படுகிறது.

ஒபாமா தம்பதியினரை வரவேற்று முடித்தவுடன் தனக்கு பிடித்தமான ராக்கிங் குதிரையுடன் விளையாட சென்றுவிட்டார். ஒபாமாவை குட்டி இளவரசர் வரவேற்ற படங்களை அரச குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

முன்னதாக, பிரிட்டனின் மகாராணியாக கடந்த 64 ஆண்டுகளாக இருந்துவரும் எலிசபெத் அரசி தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடினார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply