இந்திய சிமென்ட் கழகத்தில் ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு

download (9)

இந்திய சிமென்ட் கழகத்திற்கு சொந்தமான அசாம், போகஜன் சிமென்ட் தொழிற்சாலையில் டெக்னீசியன் பணிக்கு ஐடிஐ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:

ஆர்ட்டிசன் டிரெய்னி.

டிரேடு வாரியாக காலியிடங்கள் விவரம்:

பிட்டர்-1 (பொது), எலக்ட்ரீசியன்-1 (பொது), இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்-1 (பொது), டர்னர்-1 (பொது), வெல்டர்-1 (பொது), மெக்கானிக்கல் டிராப்ட்ஸ்மென்-1 (பொது), ஹெச்இஓ-1 (பொது).

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ. ஹெச்இஓ பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் கனரக ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

30.6.2015 தேதிப்படி 27க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி.,எஸ்டியினருக்கு 5 வருடங்களும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு ஒரு வருட பயிற்சி அளிக்கப்படும்.

சம்பளம்:

பயிற்சியின் போது மாதம் ரூ.8,400 உதவித் தொகை வழங்கப்படும். அத்துடன் தங்கும் வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட இதர சலுகைகள் அளிக்கப்படும். வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்கள் ரூ.8,400-20,400 என்ற சம்பள விகிதத்தில் நிரந்தர பணியில் அமர்த்தப்படுவார்கள்.

பதிவு கட்டணம்:

ரூ.200/- இதை Cement Corporation of India Limited, Bokajan Cement Factory, Bokajan என்ற பெயரில் Bokajanல் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுக்க வேண்டும். எஸ்சி.,எஸ்டியினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.cementcorporation.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

THE HOD (P &A),
Cement Corporation of India Limited,
Bokajan Cement Factory,
Karbi Anglong District,
ASSAM, PIN: 782490.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.6.2015.

Leave a Reply