காபி மேக்கர் கருவியால் தரையிறங்கிய அமெரிக்க விமானம்

காபி மேக்கர் கருவியால் தரையிறங்கிய அமெரிக்க விமானம்

8அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா மாகாணத்தில் அமைந்துள்ள உலகின் மிக பிசியான விமான நிலையங்களில் ஒன்று வாஷிங்டன் டல்லஸ் சர்வதேச விமான நிலைம். இந்த விமான நிலையத்தில் இருந்து முனீச் நகருக்கு லுப்தான்சா நிறுவன விமானம் ஒன்று நேற்று புறப்பட்டு சென்றது அதில் 223 பயணிகள் பயணம் செய்தனர்.

இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்தில் இருந்து புகையுடன் ஒருவித வித்தியாசமான வாசனை வெளிவந்தது. இதனால் அச்சம் அடைந்த பயணிகள் உடனடியாக விமான ஊழியர்களிடம் புகார் செய்தனர். இது குறித்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமான ஊழியர்கள் தகவல் அளித்தனர். அதை தொடர்ந்து விமானத்தை தரை இறக்கும்படி கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவு வந்தது.

இதன் காரணமாக புறப்பட்ட 70 நிமிடத்தில் பாஸ்டன் நகரில் விமானம் அவசரமாக தரை இறங்கியது. பயணிகள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு விமானம் முழுவதையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் விமானத்தில் இருந்த பழுதடைந்த காபி மேக்கரில் இருந்து புகை வெளி வந்ததால், தீ எரிவது போன்ற வாசனை வெளியானது தெரியவந்தது. இதன்பின்னர் மீண்டும் விமானம் ஒருசில மணி நேரங்களில் கிளம்பியது.

Leave a Reply