தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் நெகிழிப் பைகளுக்கான தடை கடந்த 2019ம் விதிக்கப்பட்டது.
தமிழகத்தைத் தொடர்ந்து ஜூலை 5ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பஞ்சாப் அரசும் தடை பிறப்பித்துள்ளது.
வருகிற ஜூலை மாதம் 1ம் தேதி முதல் குறைந்த பயன்பாடு மற்றும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவை இந்தியாவில் முழு அளவில் தடை செய்யப்படும் என மத்தியசுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.