ஜெயலலிதா ஜாமீன் மனு. அரசு தரப்பில் ஆஜராவாரா பவானி சிங்?

bhavani singh and jayalalithaஉச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ள ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையில் அரசு தரப்பு சார்பில் ஆஜராக எனாக்கு எவ்வித நோட்டீஸும் வரவில்லை. உச்சநீதிமன்றம் என்னை ஆஜராக உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால் நான் இந்த வழக்கில் ஆஜராக முடியாது. அதற்கான தேவையும் எனக்கு இல்லை என  அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் கூறினார்.

இதுகுறித்து பவானிசிங் இன்று செய்தியாளர்களீடம் கூறும்போது, ”ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக நான் நியமிக்கப்பட்டு வழக்குகளில் ஆஜராகி வருகிறேன்.

பெங்களூர் தனி நீதிமன்றத்திலும் கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் ஆஜராகி அவருக்கு எதிராக வாதிட்டேன். தற்போது, உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு 17 ஆம் தேதி விசாரணைக்கு வருவதாக செய்தித்தாள்களில் படித்தேன்.

இந்த வழக்கில் ஆஜராகும்படி உச்ச நீதிமன்றத்தில் இருந்து எனக்கு இதுவரை எவ்வித நோட்டீஸ் வரவில்லை. அப்படி நோட்டீஸ் வந்தால் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராவது குறித்து பரிசீலனை செய்வேன். உச்ச நீதிமன்றம் என்னை ஆஜராக உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால், நான் ஆஜராக முடியாது. அதற்கான தேவையும் இல்லை. மேலும் எனக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த திமுக என்ற அரசியல் கட்சி மனு தாக்கல் செய்துள்ளது. அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்பட போவது இல்லை. நான் எனக்கு ஒதுக்கப்பட்ட பணியை செய்கிறேன்” என்றார்

Leave a Reply