இங்கிலாந்து நாட்டின் ரயில்வே அதிகாரிகளுக்கு ஆறு வயது சிறுமி எழுதிய கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள கிழக்கு சசக்ஸ் என்ற பகுதியில் இருந்து லண்டன் பிரிட்ஜ் என்ற பகுதிக்கு செல்லும் ரயிலில் பணிபுரிபவர் நெயில் போர்ட்டர் என்பவர். இவருடைய ஆறு வயது செல்ல மகள் ஈல்லா போர்ட்டர் என்ற சிறுமி நேற்று ரயில்வே உயரதிகாரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
மழலை மொழியில் அடித்தலும் திருத்தலுமாக அந்த கடித்தத்தில் அந்த சிறுமி எழுதிய கடித்தத்தின் விவரம் வருமாறு: ‘தினமும் எனது தந்தை வரும் ரயில் தாமதமாக வருவதால் அவர் வீட்டிற்கு லேட்டாக வருகிறார். நான் தினமும் தூங்க போகும் முன் அவரை பார்க்காமல் மிஸ் செய்கிறேன். எனது தந்தை பணிபுரியும் ரயிலை தினசரி சரியான நேரத்திற்கு வரச்செய்து அவரை சீக்கிரம் வீட்டிற்கு அனுப்புங்கள்.
இந்த கடிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த உயரதிகாரி, அந்த சிறுமியிடம் ரயில்கள் தாமதமாக வருவதற்கு மன்னிப்பு கேட்டதுடன் இனிமேல் உன்னுடைய தந்தை சரியான நேரத்தில் வீட்டுக்கு வர ஏற்பாடு செய்வதாக பதில் எழுதியுள்ளார்.