பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம்; தமிழக அரசின் அடுத்த அதிரடி

பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம்; தமிழக அரசின் அடுத்த அதிரடி

+2 வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் தமிழக அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் வகையில் தமிழக கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கல் செய்யப்பட்டு வருகின்றன. +2, 10ஆம் வகுப்பு தேர்ச்சி அறிவிப்பில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படாது என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக சமீபத்தில் அறிவித்தார். இதன்படியே இரு தேர்வு முடிவுகளின் போதும் அமல்படுத்தப்பட்டது.

இதனையடுத்து +1 வகுப்பிற்கு பொதுத்தேர்வு முறை வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் என்றும், பிளஸ் 1 வகுப்பில் தவறினால் அந்த பாடங்களை பிளஸ் 2வில் எழுதவும் விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது

இந்நிலையில் +1, +2 ஆகிய இரண்டு பொதுத் தேர்வு மதிப்பெண்களையும் சேர்த்து சராசரி கணக்கிட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மேலும் +1 , +2 வகுப்புகளுக்கு வழங்கப்படும் 200 மதிப்பெண்களை 100 மதிப்பெண்களாக குறைக்கவும், தேர்வு நேரமும் 3 மணி நேரத்தில் இருந்து 2.30 மணி நேரமாக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதுதொடர்பாக இன்னும் சில நாட்களாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply