பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறைத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!

பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறைத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷா ராணி, அனைத்து வகை பள்ளி களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்ரவரி 3 முதல் 13-ம் தேதி வரையும், பிளஸ் 1 மாணவர்களுக்கு பிப்ரவரி 14 முதல் 25-ம் தேதி வரையும் செய்முறை தேர்வுகள் நடைபெறும். இதையடுத்து மாணவர்களின் செய்முறை தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் படிவத்தை ஜனவரி இறுதி வாரத்தில் http://www.dge.tn.gov.in/என்ற இணையதளத்தில் இருந்து தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

அவற்றில் மாணவர்களின் மதிப்பெண்களை பதிவு செய்து மார்ச் 3-ம் தேதிக்குள் தேர்வுத் துறைக்கு அனுப்ப வேண்டும். பிளஸ் 1 அரியர் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பிப்ரவரி 25-ம் தேதிக்குள் தனியாக செய்முறை தேர்வுகளை நடத்த வேண்டும். தேர்வு கண்காணிப்பாளர்களாக வேறு பள்ளி ஆசிரியர்களும், அகமதிப்பீடு தேர்வு கண்காணிப்பாளர்களாக அதேபள்ளி ஆசிரியர்களும் நியமிக்கப்பட வேண்டும். இந்த தேர்வை அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும், எவ்வித புகாருக்கும் இடமின்றி நடத்தி முடிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Leave a Reply