12ஆம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எவ்வளவு?

அரசு அறிவிப்பு

12ஆம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டல், விடைத்தாள் நகலுக்கு ஜூன் 24 முதல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் – தேர்வுத்துறை அறிவிப்பு

பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வு மாணவர்கள் தேர்வுமையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும் – தேர்வுத்துறை

மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும். மதிப்பீடு/மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஒரு மணி நேரத்திற்கு 20 பேர் மட்டுமே வரவழைக்கப்பட வேண்டும்

‘பள்ளி வளாகத்திற்குள் ஒன்று கூடுதலை தவிர்க்க வேண்டும்’ மாணவர்கள் முகக்கவசமும், மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் ஆசிரியர்கள் கையுறையும் அணிந்திருக்க வேண்டும். தனி மனித இடைவெளி, கை கழுவ வசதி உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என அறிவிப்பு

Leave a Reply