பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதல் 3 இடங்களை பிடித்த மாவட்டங்கள்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியாகியுள்ள நிலையில் இந்த ஆண்டு 92.1% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. இந்த மாவட்டத்தில் 97.85 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
விருதுநகரை அடுத்து இராமநாதபுரம் மாவட்டம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த மாவட்டத்தில் 96.77 சதவீத மாணவ, மாணவிகளும், மூன்றாவது இடத்தை பிடித்த ஈரோடு மாவட்டத்தில் 96.69 சதவீத மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
84.86 சதவீத மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்ச்சி பெற்ற கடலூர் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.