வேதியியல் தேர்வு எழுதிய ப்ளஸ் 2 மாணவி தற்கொலை

வேதியியல் தேர்வு எழுதிய ப்ளஸ் 2 மாணவி தற்கொலை
plus two
தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வு தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் மாணவர்கள் அனைவரும் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் குறைந்தபட்சம் பாஸ் ஆகவேண்டும் என்ற நோக்கத்திலும் படித்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று முன் தினம் நடந்த வேதியியல் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததால் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

இதுவரை பொதுத்தேர்வில் கேட்கப்படாத கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், கேள்வித்தாளை தயார் செய்பவர்கள் முக்கியமான கேள்விகளை தவிர்த்துவிட்டு வேண்டுமென்றே கடினமான கேள்விகள் கேட்டுள்ளதாகவும் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் பல மாணவர்கள் தேர்வு முடிந்து வெளியே வந்தவுடன் கேள்வித்தாளை கிழித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் 100 மார்க் எடுப்பதே கடினம் என்று கூறிவருகின்றனர்.

இந்நிலையில் வேதியியல் தேர்வை சரியாக எழுதாத குமரி மாவட்டத்தை சேர்ந்த ஜெதர்சினி என்ற மாணவி மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது

Leave a Reply