குளச்சல் துறைமுக அடிக்கல் நாட்டு விழாவில் மோடி-ஜெயலலிதா

குளச்சல் துறைமுக அடிக்கல் நாட்டு விழாவில் மோடி-ஜெயலலிதா

18-jayalalitha-modi8-600-jpgகன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு குளச்சலில் துறைமுகம் அமையவேண்டும் என்பது. இதுகுறித்து கடந்த பல வருடங்களாக மாநில அரசு, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ள நிலையில் தற்போது மோடி தலைமையிலான அரசு குளச்சலில் துறைமுகம் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஆனால் குளச்சலில் துறைமுகம் அமைந்தால் கேரளாவில் உள்ள விழிஞத்தில் கட்டப்பட்டு வரும் துறைமுகத்திற்கு பாதிப்பு வரும் என்றும் குளச்சல் துறைமுகத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கேரள அரசு வலியுறுத்தியது.

ஆனால் கேரள அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த பிரதமர் மோடி, குளச்சலில் கண்டிப்பாக துறைமுகம் அமையும் என்று உறுதிபட கூறிவிட்டார். இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

கேரள முதல்வரின் கோரிக்கையை நிராகரித்த பிரதமர் மோடிக்கு எங்கள் நன்றியை கூறி கொள்கிறோம். இரு துறைமுகங்கள் அருகருகே அமைவதால் எந்த பிரச்சனையும் இல்லை. குளச்சலில் துறைமுகம் அமைவதால் விழிஞத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. அடுத்த கட்டமாக நிலங்கள் அளப்பது, சாலை, ரெயில் பாதை அமைத்தல் போன்ற பணிகள் மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் செய்யப்படும். அடிக்கல் நாட்டு விழா ஓரிரு மாதங்களில் நடக்கும். மிகப்பிரமாண்டமாக நடைபெறும் இந்த விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் என்று கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply