ஃபேஸ்புக் மூலம் சிங்கப்பூர் பிரதமர் குடும்பத்தின் மானம் கப்பலேறியது.

ஃபேஸ்புக் மூலம் சிங்கப்பூர் பிரதமர் குடும்பத்தின் மானம் கப்பலேறியது.

singaporeசிங்கப்பூர் பிரதமர் லீ லூங்கின் மனைவி ஹோ சிங் மற்றும் அவரது சகோதரிக்கும் இடையே நடைபெறும் குடும்பச்சண்டை ஃபேஸ்புக் மூலம் வீதிக்கு வந்துள்ளது. இதனால் சிங்கப்பூர் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பிரதமர் லீ லூங் அவர்களின் சகோதரி சமீபத்தில் தனது ஃபேஸ்புக்கில் லீ லூங் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நாட்டில் வாரிசு அரசியலை உருவாக்க முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டி ஒரு பதிவை வெளியிட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் லீயின் மனைவி ஹோ சிங் தனது பேஸ்புக் பக்கத்தில் குரங்கு படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த படத்தை அவரை பேஸ்புக்கில் பின்தொடர்பவர்கள் உடனடியாக பகிர்ந்து கொண்டதால் பெரும் சர்ச்சை வெடித்தது.

இந்நிலையில் திடீரென தனது தவறை உணர்ந்து கொண்ட ஹோ சிங், கடந்த ஞாயிறன்று அந்த குரங்கு படத்தை தனது பதவில் இருந்து நீக்கினார். பின்னர் அவர் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கூறுகையில், ‘‘சமூகவலைதளத்தில் இடம் பெற்றிருந்த வித்தியாசமான பொத்தான்களை அழுத்தி விளையாடும் போது, இந்த தவறு நிகழ்ந்துவிட்டது. உலகில் எண்ணற்ற பிரச்சினைகள் இருக்கும்போது அதை விட்டுவிட்டு இந்த பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுப்பது எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல ஆகிவிடும். எங்களது குடும்ப பிரச்சினைகளுக்கு நாங்களே தீர்வு காண்போம்’’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply