டிரம்ப் மனைவிக்கு வெள்ளிச்செயின் பரிசளித்த பிரதமர் மோடி
பாரத பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் செய்த நிலையில் அவருக்கு வெள்ளை மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. வெள்ளை மாளிகையில் சுமார் ஐந்து மணி நேரம் தங்கியிருந்த மோடி, டிரம்ப் அளித்த விருந்திலும் கலந்து கொண்டார்.
பின்னர் வெள்ளை மாளிகையில் இருந்து கிளம்பும் முன், அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா டிரம்ப் ஆகியோருக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கைவிஞை கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட சால்வைகளை மோடி பரிசளித்தார். அதுமட்டுமின்றி இமாச்சல் பிரதேச கலைஞர்கள் தயாரித்த வெள்ளி கைசெயின், தேயிலை மற்றும் தேன் ஆகியவற்றை மெலினா டிரம்புக்கு பரிசளித்தார்.
மேலும் கடந்த 1965ஆம் ஆண்டு அமெரிக்காவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான, முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிங்கனின் உருவம் பொரித்த தபால் தலை இந்தியாவில் வெளியிடப்பட்டது. அதன் உண்மையான ஸ்டாம்பை டிரம்ப் தம்பதிகளுக்கு மோடி பரிசளித்தார்.
https://www.youtube.com/watch?v=h-o2Q5_2qtU&feature=youtu.be