குரங்கணி காட்டுத்தீ: நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி பாராட்டு
நேற்று முன் தினம் தேனி மாவட்டம் குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் டிரெக்கிங் சென்ற 10 பேர் பரிதாபமாக தீயில் கருகி மரணம் அடைந்த நிலையில் குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுத்த பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த விபத்தில் லேசான காயம் அடைந்தவர்கள் அவர்களது வீட்டுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வருகிறது.