இன்று முதல் கொச்சியும் மெட்ரோ ரயில் நகரம். பிரதமர் துவக்கி வைத்தார்.

இன்று முதல் கொச்சியும் மெட்ரோ ரயில் நகரம். பிரதமர் துவக்கி வைத்தார்.

இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் மெட்ரோ ரயில் வசதி இருக்கும் நிலையில் இன்று முதல் கேரளாவின் கொச்சி நகரும் இதில் இணைந்து கொண்டது. கொச்சியில் உள்ள பலரிவட்டம் மற்றும் அலுவா இடையே 13 கி.மீ தூரத்துக்கான மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டது.

பாரத பிரதமர் நரேந்திரமோடி இன்று காலை 10.15 மணியளவில் கொச்சியில் உள்ள ஐ.என்.எஸ் கருடா விமான தளத்தில் உள்ள விமான நிலையம் வந்தார். கொச்சி வந்த பிரதமரை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், மெட்ரோ ரயில் நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, மெட்ரோ ரயில் சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மெட்ரோ ரயிலில் பயணமும் மேற்கொண்டார். அவருடன், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மத்தியஅமைச்சர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் பயணம் செய்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில், கேரள ஆளுநர் சதாசிவம், மாநில சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, எர்ணாகுளம் எம்.பி. கே.வி. தாமஸ், மெட்ரோ திட்ட ஆலோசகர் இ. ஸ்ரீதரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply