பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த ஸ்வீடன் பிரதமர்

பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த ஸ்வீடன் பிரதமர்

பாரத பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக ஸ்வீடன், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்த பயணத்தின் முதல் கட்டமாக ஸ்வீடன் நாட்டுக்கு நேற்று சென்றார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று அதிகாலை ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமை சென்றடைந்தார். விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு ஸ்வீடன் நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோவன் சிறப்பான வரவேற்பு அளித்தார். மேலும், இந்திய தூதரக அதிகாரிகளும் அவரை உற்சாகமாக வரவேற்றனர். விமான நிலையத்தில் காத்திருந்த இந்தியர்கள் பிரதமர் மோடியை கைகுலுக்கி வரவேற்றனர்.

ஸ்டாக்ஹோமில் இன்று நடைபெறும் இந்தோ-நார்டியாக் (ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளை கொண்ட கூட்டமைப்பு) முதல் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

மேலும், இந்தியாவுடனான வர்த்தகம், முதலீடு, சுற்றுச்சூழல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பருவநிலை மாற்றம் தொடர்பாகவும் இருநாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

ஸ்வீடன் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி பிரிட்டன் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply