நேதாஜியின் ஆவணங்கள் மூலம் அரசியல் செய்கிறதா காங்கிரஸ்-பாஜக?

நேதாஜியின் ஆவணங்கள் மூலம் அரசியல் செய்கிறதா காங்கிரஸ்-பாஜக?
nethaji
பாரத பிரதமர் நரேந்திரமோடி நேற்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த முக்கிய ஆவணங்களை வெளியிட்டார். ஆனால் நேதாஜியின் ஆவணங்கள் வெளியிடுவதிலும், காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சிகள் அரசியல் செய்வதாக அரசியல் வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நேதாஜியின் ஆவணங்கள் வெளியீடு குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியபோது, ‘நேதாஜி ஆவண வெளியீடு விவகாரத்தை பிரதமர் மோடி கையாண்ட விதம் அவரது உள்நோக்கம் குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது. இதை நாடு புரிந்து கொள்ள வேண்டும். அனைத்துத் துறைகளிலும் தனது அரசின் தோல்வியில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக மோடி இத்தகு நாடகங்களை நடத்துகிறார்’ என்று கூறியுள்ளார்.

ஆனால் இதற்கு விளக்கமளித்து பாஜக தேசியச் செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா, ‘ நேதாஜி தொடர்புடைய ஆவணங்கள் வெளியிடப்பட்டதில் ஒட்டுமொத்த நாடே மகிழ்ச்சியடைந்துள்ள வேளையில், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் நடத்தும் அற்பமான அரசியலை பாஜக கண்டிக்கிறது. மேலும், மிகப்பெரிய சுதந்திரப் போராட்டத் தலைவர்களுக்கு மரியாதை அளிப்பதற்கு மோடி அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எங்கள் கட்சி பாராட்டுகிறது’ என்று கூறியுள்ளார்.

சுதந்திரத்திற்காக பாடுபட்டு தனது இன்னுயிரை தியாகம் செய்த நேதாஜியின் ஆவணங்களை வைத்து இருபெரும் கட்சிகளும் அரசியல் செய்வதாக பெரும்பாலான நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply