குடும்ப கட்சிகள் கொள்ளையடிக்கின்றன என்றும், குடும்ப கட்சிகள் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என தமிழகம் வருவதற்கு முன்னர் தெலுங்கானாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
குடும்ப கட்சிகள் ஜனநாயகத்திற்கு மட்டுமல்ல நம் நாட்டு இளைஞர்களுக்கும் ஆபத்தானது என்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்சிகள் ஊழலின் முகமாக இருக்கின்றன என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்
சுய வளர்ச்சி மட்டுமே அவர்களின் குறிக்கோள் என்றும் ஏழைகளை பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை என்றும் அவர்களின் எண்ணம் எல்லாம் எப்படி ஒரே குடும்பம் அதிகாரத்தை பிடிப்பது எப்படி கொள்ளையடிப்பது என்பது தான் என்றும் தமிழ்நாடு வருகைக்கு முன் தெலுங்கானாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்