கடந்த சில ஆண்டுகளாக இலவச ரேஷன் திட்டம் மத்திய அரசு அமல்படுத்தி வரும் நிலையில் இந்த திட்டம் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை பாதிப்பின் போது நாடு முழுவதும் ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டம் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு எனவும், இதற்கான ஒப்புதல் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் பெறப்பட்டது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.