ஸ்வீடன் பிரதமருடன் மோடி முக்கிய பேச்சுவார்த்தை

உலகம் சுற்றும் மோடியால் மக்களவையில் பேச முடியாதது ஏன்? ராகுல்காந்தி

ஸ்வீடன் பிரதமருடன் மோடி முக்கிய பேச்சுவார்த்தை

அரசுமுறை பயணமாக ஸ்வீடன் நாட்டுக்கு சென்றுள்ள பாரத பிரதமர் நரேந்திரமோடி, அந்நாட்டு பிரதமருடன் நேற்று முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இவற்றில் முக்கியமாக ராணுவத்துறையில் இரு நாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது

சுவீடன் பிரதமருடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி கூறியதாவது: “சுவீடன் பிரதமருடன் இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினேன். இந்தப் பேச்சு வார்த்தையின்போது, இந்தியாவின் வளர்ச்சிப்பயணத்தில் சுவீடன் எப்படியெல்லாம் உதவ முடியும் என்பது குறித்து விவாதித்தோம்

இரு தரப்பு புதிய கண்டுபிடிப்புகளில் கூட்டாளிதுவத்துக்கும், கூட்டு செயல்திட்டம் வகுக்கவும் ஒப்புக்கொண்டு உள்ளோம். ராணுவம், இணையதள பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை பலப்படுத்துவது என்று முடிவு செய்து உள்ளோம்’ என்று கூறினார

சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோப்வென் நிருபர்களிடம் பேசும்போது, இந்தியா உலகளாவிய சக்தியாக உருவெடுத்து இருக்கின்றது. இரு நாடுகளும் மிகச்சரியான ஜோடி. பசுமை தொழில் நுட்பம், ஸ்மார்ட் நகரங்கள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை தீவிரப்படுத்த நாங்கள் முடிவு செய்து உள்ளோம்”

 

Leave a Reply