பிரதமர் மோடி இன்று அமெரிக்கா பயணம். நாளை ஐ.நாவில் பேசுகிறார்.

modi and obamaபாரத பிரதமர்பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாட்கள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். நாளை ஐ.நா.சபையில் அவர் முதன்முதலாக உரையாற்றுகிறார்.
 
கடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று இந்திய பிரதமராக பதவி ஏற்ற நரேந்திரமோடி, பிரதமர் ஆன பின்னர் முதன் முறையாக அமெரிக்கா செல்கிறார். மோடி, நாளை ஐ.நா. பொது சபை கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகிறார். அமெரிக்காவில் அவர் இலங்கை அதிபர் ராஜபக்சே, நேபாள பிரதமர் ஷில் கொய்ராலா, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகிய தலைவர்களிடம் தனித்தனியே சந்தித்து பேச்சு நடத்த முடிவு செய்துள்ளார்.
 
இதை தொடர்ந்து, அமெரிக்கா வாழ் இந்தியர்களை சந்தித்து பேச உள்ள பிரதமர், முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களையும் சந்திக்கிறார். 29 ஆம் தேதி வாஷிங்டனில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த 5 நாள் பயணத்தின்போது பிரதமர் மோடி, மொத்தம் 50 நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள இருப்பதாக அவருடைய பயணத்திட்டம் அறிவிக்கின்றது.

Leave a Reply