பாரத பிரதமர் நரேந்திரமோடி, பிரதமராக பதவியேற்றதில் இருந்து உலகின் எந்த நாட்டு அதிபருக்கு பிறந்த நாள் வந்தாலும் அவர்களுக்கு தொலைபேசி மூலமோ அல்லது டுவிட்டரிலோ பிறந்த நாள் வாழ்த்து கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் ஆர்வக்கொளாறில் ஆப்கன் அதிபருக்கு தவறான நாளில் பிரதமர் பிறந்த நாள் வாழ்த்து கூறியதாக வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடீ தனது டுவிட்டரில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை நேற்று தெரிவித்திருந்தார். ஆனால் இந்த வாழ்த்துச் செய்திக்கு பதில் அனுப்பியுள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, தனது பிறந்த நாள் மே 19 என்றும், இருப்பினும் வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி என்றும் டுவிட் செய்துள்ளார். இதையடுத்து பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனிக்கு தவறான நாளில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது தெரியவந்துள்ளது
பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு அதிகம் பேரால் பின்தொடரப்படும் இந்திய அரசியல்வாதி என்ற பெருமை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.