பிரதமர் மோடியிடம் திருநெல்வேலி மாணவி கேட்ட கேள்வி
நாளை செப்டம்பர் 5, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த விழாவினை அடுத்து அவர் நாடெங்கிலும் உள்ள மாணவர்களுடன் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் உரையாடினார். பல மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு சுவாரசியமாக பதிலளித்த பிரதமர் திருநெல்வேலி மாணவி விசாலினி கேட்ட ஒரு வித்தியாசமான கேள்விக்கும் சுவையான ஒரு பதிலை அளித்தார்.
பல்வேறு மாநிலங்களில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமரிடம் கேட்ட கேள்விகளில் ஒருசிலவற்றை இங்கு பார்ப்போம். .
வெற்றி பெற்ற அரசியல்வாதியாக திகழ நமக்கு என்ன தகுதி வேண்டும் ?
தலைமை பொறுப்பை நாம் ஏற்க, நம்மை தலைசிறந்தவர்களாக்கி கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் குறித்த கருத்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. மக்கள் சேவை செய்ய வருவோர் குறித்து மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவது கவலை அளிக்கிறது. மக்கள் பாதிக்கப்படும்போது சிறந்த முடிவுகள் எடுக்கும் தலைமை பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும் நபர்கள் அரசியலுக்கு வர வேண்டும். மக்கள் அச்சப்படுகின்றனர். நான் நூலகம் சென்ற போது அதிகம் விவேகானந்தர் புத்தகத்தை படிப்பேன் அது என்னிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது ?
நான் படித்த பள்ளி ஒரு சிறிய கிராமத்தில் இருந்தது. இதனால் எனக்கு அங்கு நவீன விளையாட்டு ஏதுமில்லை. அரசியல்வாதி விளையாட்டை நாம் எல்லோரும் தெரிந்து வைத்துள்ளோம்.
ஸ்வச் பாரத் மிஷன் திட்டம் பெரும் சவால்களைச் சந்தித்துள்ளதா ?
சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் இந்தத் திட்டத்திற்கு திடக்கழிவு மேலாண்மை பெரும் சவாலாக உள்ளது . இந்தத் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு மீடியாக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உதவுகின்றன.
திருநெல்வேலி மாணவி விசாலினி கேட்ட கேள்வி இதுதான்
நான் நாட்டிற்காக சேவை செய்ய விரும்புகிறேன். அதற்கு சிறந்த வழி எது ?
நாட்டுக்கு சேவை செய்ய ராணுவத்தில் சேர வேண்டும், அரசியலுக்கு வரவேண்டும் என்பதில்லை. சிறிய, சிறிய வழியில் பணியாற்ற முடியும். சிறு, சிறு பங்களிப்பு மூலம நாட்டிற்கு சேவையாற்ற முடியும். மின்சாரம் , பெட்ரோல், உணவு சேமிப்பு, தண்ணீர் சிக்கனம் கடைபிடிக்க வேண்டும். இதுவே ஒரு சேவைதான்” என மோடி பதிலளித்தார்.