கொச்சியில் ஆய்வுப்பணிகளை தொடங்கிய பிரதமர் மோடி
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக அம்மாநில மக்கள் பெரும் துயரத்தில் இருந்து வரும் நிலையில் கேரள மக்களுக்கு கைகொடுக்க நாடே முன்வந்துள்ளது. இந்தியாவின் பல மாநில அரசுகள், தனியார் அமைப்புகள் பொருள் உதவியும் நிதியுதவியும் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கேரளாவின் வெள்ள பாதிப்புகளை பார்வையிட நேற்று டெல்லியிலிருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி கேரளா சென்றடைந்தார். திருவனந்தபுரத்தில் இரவு தங்கிய பிரதமர் சற்றுமுன் தனி விமானம் மூலம் கொச்சி புறப்பட்டார். அவரை கேரள மாநில கவர்னர் சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய சுற்றுலா துறை அமைச்சர் அல்போன்ஸ் மற்றும் அம்மாநில அமைச்சர்கள் கொச்சியில் வரவேற்றனர்.
இன்று ஹெலிகாப்ட்ரில் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிடும் பிரதமர் மோடி மாலையில் டெல்லி திரும்பியவுடன் கேரளாவுக்கான நிதியுதவி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.