திடீரென மேற்குவங்கம் செல்லும் பிரதமர் மோடி:

என்ன காரணம்?

நேற்று முன்தினம் மேற்கு வங்க மாநிலத்தில் அம்பன் புயல் கரையை கடந்த நிலையில் ஏராளமான சேதங்கள் அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது

இந்த புயல் காரணமாக 72 பேர் உயிரிழந்ததாகவும் லட்சக்கணக்கான கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து அங்கு மீட்பு பணிகளை மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் உள்ள புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட இன்று பிரதமர் மோடி அவர்கள் மேற்குவங்கத்திற்கு செல்லவுள்ளார்

இன்றைய பயணத்தின்போது அவர் மேற்குவங்க மாநிலத்திற்கு பல்வேறு சலுகை திட்டங்களை மற்றும் புயல் நிவாரண நிதி குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. புயல் சேதம் குறித்த ஆலோசனை கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ள உள்ளார் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply