6 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட ராணுவ வீரரை பார்க்க விரைந்த பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சியாச்சின் பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஒரு ராணுவ அதிகாரி உள்பட பத்து இந்திய ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று ராணுவ வீரர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். இருப்பினும் ஆபத்தான நிலையில் உள்ள அவரை காப்பாற்ற ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய ராணுவ வீரர் உயிருடன் மீட்கப்பட்ட தகவல் அறிந்ததும் பிரதமர் நரேந்திர மோடியும், ராணுவ தலைமை தளபதி தல்பீர் சிங்கும் ராணுவ மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். ஆனால் மருத்துவர்கள் ராணுவ வீரரை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. எனவே ராணுவ வீரருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் பிரதமர் மோடி ராணுவ வீரரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
மருத்துவர்கள் பிரதமரிடம் ராணுவ வீரருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து விளக்கி கூறியதோடு வீரரை காப்பாற்ற தனது குழுவினர் முழு முயற்சியும் எடுத்து வருவதாகவும் கூறியதாக தகவல்கள் வந்துள்ளது.