நேற்று மாலை இந்தியாவின் 15வது பிரதமராக பதவியேற்றுக்கொண்ட நரேந்திரமோடி, இன்று காலை டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு சென்று பணிகளை ஏற்றுக்கொண்டார். அவருக்கு பிரதமர் அலுவலக ஊழியர்கள் பூங்கொத்துக்கள் கொடுத்து சிறப்பான வரவேற்பை கொடுத்தனர்.
பிரதமராக பணியேற்றுக்கொண்ட நரேந்திரமோடி முதல் கையெழுத்தாக நேற்று உத்தரபிரதேசத்தில் நடந்த ரயில் விபத்தில் பலியான 22 பேர்களுக்கு தலா ரூ.2 லட்சம் கருணைத்தொகை வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டார். மேலும் விபத்து மீட்பு நடவடிக்கை குறித்து கேபினட் செயலாளரிடம் கேட்டறிந்த பிரதமர், உடனடியாக விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் தேவையான உதவிகள் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் இந்த விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.1 லட்சமும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10ஆயிரமும் வழங்க நேற்று இந்தியன் ரயில்வே உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.