மலேசிய விமானம் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அறிந்தவுடன் விமானி சாதுர்யமாக விமானப்பயண பாதையை மாற்றியதால் பாரத பிரதமர் மோடி வந்த விமானம் தப்பித்ததாக கூறப்படுகிறது.
பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு, புதுடில்லி திரும்பிக்கொண்டிருந்த பிரதமர் மோடி பயணம் செய்த விமானம், மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட அதே வான் வழியில்தான் வந்துகொண்டிருந்தது. மலேசிய விமானம் ஏவுகணை மூலம் வீழ்த்தப்பட்டது குறித்து தகவல் கிடைத்தவுடன் உடனடியாக சாதுர்யமாக செயல்பட்ட பிரதமர் மோடியின் விமானி, உடனடியாக வேறு பாதைக்கு விமானத்தின் பாதையை மாறினார். இதனால் எவ்வித பிரச்சனையும் இன்றி மோடி புதுடில்லி வந்து சேர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்திய பிரதமர் மோடி பயணம் செய்த விமானம் ஜெர்மனியின் பிராங்ஃப்ர்ட் நகரில் இருந்து க்ரீன்வீச் நேரப்படி 11.22 க்கு கிளம்பியதாகவும், மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒருமணி நேரத்தில் மோடி விமானம் அதே பாதையில் வந்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.