வானொலி மூலம் பிரதமரிடம் நேரடி தொடர்பு. ஜெயலலிதாவுக்காக வாய்ப்பை பயன்படுத்துமா அதிமுக?

maan ki baatபாரத பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களிடம் நேரடி தொடர்பில் இருக்க வானொலி மூலம் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பிரதமருக்கு நேரடியாக தெரிவிக்கலாம் என்ற புதிய திட்டத்தை இன்று முதல் ஆரம்பித்து வைத்துள்ளார்.

பொதுமக்களின் ஆலோசனைகள் பிரதமருக்கும், பிரதமரின் திட்டங்கள் பொதுமக்களுக்கும் நேரடியாக சென்றடைய இந்த திட்டம் உதவும் என கூறப்படுகிறது. இதன்மூலம் பிரதமரின் திட்டங்கள் நாட்டின் மூலை முடுக்குகளில் வாழ்ந்துவரும் கடைநிலை குடிமகன் வரை நேரடியாக சென்றடையும் அவர் நம்புவதாக கூறப்படுகிறது.

இன்று பாரத பிரதமர் முதல்முறையாக ‘மான் கீ பாரத்” ( The Heart Talk) என்ற நிகழ்ச்சியின் மூலம் இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். பாரத பிரதமர்  அறிவிக்கும் திட்டங்களை ஆல் இந்தியா ரேடியோ நேரடியாக ஒலிபரப்புவதுடன் அனைத்து எப்.எம் வானொலிகளுக்கும், செய்தி தொலைக்காட்சி சேனல்களுக்கும் பகிர உள்ளது. தூர்தர்ஷன் இந்த நிகழ்ச்சிக்கென தனியாக நேரத்தை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களும் தங்கள் கருத்துக்களை நேரடியாக வானொலி மூலம் தெரிவித்தால் அவை அனைத்தும் பிரதமரின் பார்வைக்கு நேரடியாக சென்றடையும். எனவே இந்த அரிய வாய்ப்பினை தமிழக மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய நேரம் இது அனைவரும் கருதுகின்றனர்.

தமிழக மக்களுக்காக பல அரிய திட்டங்களை தீட்டி, தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்ற புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தற்போது பெங்களூர் சிறையில் முடக்கி வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் கிடைக்கவும், இந்த வழக்கை மேல்முறையீட்டு செய்வதன் மூலம் அவர் நிரபராதி என நிரூபிக்க ஒரு வாய்ப்பு கொடுக்கவும் தமிழக மக்களும், அதிமுகவினரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிரதமருக்கு கோரிக்கையாக வைத்தால், பிரதமரும் மத்திய அரசும் இந்த விஷயத்தில் தலையிட ஒரு வாய்ப்பு அமையும் என கூறப்படுகிறது. அதிமுகவினர்களும் பொதுமக்களும் இதுகுறித்து பிரதமருக்கு நேரடியாக கோரிக்கை விட வேண்டும் என பெரும்பாலான பொதுமக்கள் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

Leave a Reply