மோடி வசிக்கும் தெருப்பெயரை மாற்றினார் அரவிந்த் கெஜ்ரிவால்
பிரதமர் மோடிக்கும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று மோடி வசிக்கும் ரேஸ்கோர்ஸ் சாலையின் பெயரை லோக் கல்யாண் மார்க் என மாற்றப்பட்டுளது. இந்த தகவலை நேற்று டெல்லி மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதுஜ்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், புதுடெல்லி மாநகராட்சி தலைவர் நரேஷ்குமார் ஆகியோர் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியபோது, ‘பிரதமர் மோடி உட்பட பலரும் மக்கள் நலனை நோக்கமாகக் கொண்டே அரசியலுக்கு வந்தோம். மக்கள் நலனை விட பெரியது வேறில்லை. எனவே, பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வசிக்கும் இந்த சாலைக்கு, லோக் கல்யாண் (மக்கள் நலன்) எனப் பெயரிடுவது பொருத்தமானது” என கூறியுள்ளார்.
ஆனால் பாஜகவினர் வேறு ஒரு பெயரை இந்த சாலைக்கு பரிந்துரை செய்ததாகவும், அதை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.