தகவல் அறியும் சட்டத்தின்படி பிரதமர் மனைவி கேட்ட விண்ணப்பம் என்ன?

தகவல் அறியும் சட்டத்தின்படி பிரதமர் மனைவி கேட்ட விண்ணப்பம் என்ன?
modi with wife
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தனக்கும் தனது கணவருக்கும் நடைபெற்ற திருமணம் தொடர்பான ஆவணங்களை அளிக்கும்படி விண்ணப்பம் செய்துள்ளார். இந்த விண்ணப்பம் உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என பாஸ்போர்ட் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதாபென் கடந்த நவம்பர் மாதம் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்தார். ஆனால் அவர் தனது திருமண சான்றிதழை பாஸ்போர்ட் அலுவலகத்தில் தாக்கல் செய்யவில்லை. பிரதமர் மோடியை திருமணம் செய்ததற்கான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும்படி அவருக்கு வலியுறுத்தப்பட்டது. மேலும் அவருடைய பாஸ்போர்ட் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று யசோதாபென் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டப்படி ஒரு விண்ணப்பம் கொடுத்தார். அதில், நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது பாஸ்போர்ட் பெறுவதற்காக திருமணம் தொடர்பாக தாக்கல் செய்த ஆவணங்களை தனக்கு வழங்கும்படி கேட்டு விண்ணப்பித்துள்ளார்.அவர் கேட்டிருக்கும் ஆவணங்கள் உரிய பரிசீலனைக்கு பின்னர் அளிக்கப்படும் என்று பாஸ்போர்ட் மண்டல அதிகாரி கான் நேற்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Leave a Reply