இந்திய-இஸ்ரேலிய உறவு புதிய உச்சத்தை எட்டும். பிரதமர் மோடி

இந்திய-இஸ்ரேலிய உறவு புதிய உச்சத்தை எட்டும். பிரதமர் மோடி

இந்திய, இஸ்ரேலிய உறவு புதிய உச்சத்தை எட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் அரசு பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூவை சந்திது பேசினார். பின் இரு நாடுகளிடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதையடுத்து டெல் அவிவ் நகரில் இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்தார். இதில் இந்திய கலாச்சார நடன நிகழ்ச்சிகள் நடந்தன.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூவும் கலந்து கொண்டார். இருநாட்டு தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. பின் இஸ்ரேல் பிரதமர் நேதன் யாஹூ , பேசினார். ‛‛நமஸ்தே” என இந்தியில் துவங்கினார். இரு நாடுகளிடையே வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு இது. இந்தியர்கள் மத்தியில் உரையாட வந்துள்ள என் நண்பர் மோடியை வரவேற்கிறேன். என்றார்

பின் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில்,’ முதன்முறையாக இந்திய பிரதமராக இஸ்ரேல் வந்துள்ளேன். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. இரு நாடுகளிடையே இரண்டாயிரம் ஆண்டுகால உறவு உள்ளது. இந்த உறவு புதிய உச்சத்தை எட்டும். இஸ்ரேலியர்கள் என்னிடம் காட்டிய அன்பை என்னால் மறக்க முடியாது என்றார்.

Leave a Reply