சீன சுற்றுப்பயணத்தின்போது கொடுத்த வாக்கை காப்பாற்றிய மோடி

சீன சுற்றுப்பயணத்தின்போது கொடுத்த வாக்கை காப்பாற்றிய மோடி

modiசீன சுற்றுலாப் பயணிகளுக்கு மின்னணு முறையில் நுழைவு இசைவு (இ-விசா) வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சீன சமூக வலைதளமான “வெய்போ’வில் மோடி தெரிவித்துள்ளதாவது: கடவுச்சீட்டு வைத்துள்ள சீனர்கள் அனைவருக்கும் இந்தியா வருவதற்கு மின்னணு முறையில் நுழைவு இசைவு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பாதுகாப்புக் காரணிகளைப் புறந்தள்ளி, இந்த முடிவை இந்திய அரசு எடுத்துள்ளது.

இதுதொடர்பாக எனது சீன சுற்றுப்பயணத்தின்போது பேசியிருந்தேன். அந்த வாக்குறுதியை இந்தியா நிறைவேற்றிவிட்டது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டாகும். வாருங்கள், எழில்மிகு இந்தியாவைக் கண்டுகளியுங்கள் என அதில் மோடி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த மின்னணு நுழைவு இசைவு வசதி ஜூலை 30 முதல் அமல்படுத்தப்படும் என சீனாவில் உள்ள இந்தியத் தூதரகங்கள் அறிவித்துள்ளன.

Leave a Reply