47 வயசாச்சு, திருமணம் என்ன ஆச்சு! கலாய்த்த நெட்டிசன்கள், வாழ்த்திய பிரதமர்
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும் சோனியா காந்தியின் மகனுமான ராகுல்காந்திக்கு இன்று 47வது பிறந்த நாள் ஆகும். 47 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் ராகுல்காந்தியை நெட்டிஸன்கள் கலாய்த்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: “ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுள் ஆரோக்கியுடத்துடன் வாழ வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க உள்ள ராகுல்காந்தி தன்னுடைய 47வது பிறந்த நாளை இன்று இத்தாலியில் உள்ள தனது உறவினர்களுடன் கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.