ஜப்பானில் டிரம்ஸ் வாசித்த பிரதமர் மோடி. குழந்தைகள் உற்சாகம்

modi drumsஜப்பான் நாட்டில் ஐந்து நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணமாக சென்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள அகாடமி திறப்பு விழாவில் கலந்து கொண்டு டிரம்ஸ் வாசித்தார்.

 5 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்துவதற்காகவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று காலை டிசிஎஸ் ஜப்பான் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார அகாடமி திறப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார். இந்த விழாவில் டிரம்ஸ் வாசித்த இளைஞர் ஒருவருடன் இணைந்து பிரதமர் மோடியும் உற்சாகமாக டிரம்ஸ் வாசித்தார்.

மோடி டிரம்ஸ் வாசித்தை பார்த்து அங்கிருந்தவர்கள் உற்சாக மிகுதியால் கைதட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.அப்போது  டிரம்ஸ் கலைஞருடன் பேசிய பிரதமர் மோடி இந்தியாவிற்கு வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் மற்றொரு நிகழ்ச்சியில் ஜப்பான் குழந்தைகளின் மத்தியில் மோடி புல்லாங்குழல் வாசித்து காட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதையடுத்து பிரதமர் மோடி இன்று ஜப்பானில் இந்திய தூதரகத்தில் விவேகானந்தா கலாச்சார மையத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1ujbQne” standard=”http://www.youtube.com/v/RMrfMy0hGZc?fs=1″ vars=”ytid=RMrfMy0hGZc&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep2127″ /]

Leave a Reply