பிரதமர் நரேந்திர மோடி ஃபேஸ்புக், டுவிட்டர் ஆகிய இரண்டு சமூக இணையதளங்களிலும் உலக அளவில் பிரபலமாக இருந்து வரும் நிலையில், சீனாவில் உள்ள சமூக வலைத்தளம் ஒன்றிலும் தற்போது புதிதாக இணைந்துள்ளார்.
பாரத பிரதமர் மோடி அடுத்த வாரம் சீனாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில் சீன மக்களுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ளும் வகையில், அந்நாட்டின் பிரபல சமூக வலைத்தளமான “சைனா வெய்போ” என்ற சமூக வலைத்தளத்தில் கணக்கு தொடங்கியிருக்கிறார்.
இந்த சமூக வலைத்தளத்தில் கணக்கு தொடங்கியிருக்கும் முதல் இந்தியத் தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வலைத்தளத்தில் அவர் பதிவு செய்துள்ள முதல் தகவல் ஒன்றில், “ஹலோ சீனா. சீன நண்பர்களுடன் உரையாட எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
சைனா வெய்போவில் அவர் கணக்குத் தொடங்கி ஒரு மணி நேரத்தில் 7000 பார்வைகள் கிடைத்துள்ளது. பிரதமரான பிறகு முதன் முறையாக சீனா செல்கிறார் மோடி. மே 14 முதல் 16 வரை அவர் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.