ஜெர்மனியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த நேதாஜியின் உறவினர். பெரும் பரபரப்பு

nethaji relative and modiநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் உறவினர்கள் கடந்த ஜவஹர்லால் நேரு ஆட்சியில் பல ஆண்டுகளாக உளவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்தியை அடுத்து ஜெர்மனியில் சுற்றுப்பயணம் செய்த பாரத பிரதமர் நரேந்திர மோடியை நேதாஜியின் உறவினர் சந்தித்துப் பேசியுள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இந்தியாவை பிரிட்டிஷாரிடம் இருந்து விடுவிக்க இந்திய தேசிய ராணுவத்தை (ஐ.என்.ஏ) தொடங்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கடந்த 1945 ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான  நேரு அவர் பிரதமராக இருந்த 1968 ஆம்  ஆண்டு வரை நேதாஜியின் குடும்பத்தினரை உளவு பார்த்தாக சமீபத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள பிரதமர் மோடியை அங்கு நிரந்தரமாக வாழ்ந்து வரும் நேதாஜியின் உறவினரான சூர்யகுமார் போஸ் நேற்று நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது சூர்யகுமார் போஸ், பிரதமர் மோடியிடம் நேதாஜி தொடர்பான ரகசிய கோப்புகளை கண்டுபிடித்து உண்மை என்ன என்பதை வெளியுலகிற்கு தெரியப்படுத்தும்படி வலியுறுத்தினார். பிரதமர் மோடியும், இவ் விவகாரத்தை தனது முக்கிய பணிகளில் ஒன்றாக எடுத்துக் கொண்டு பரிசீலனை செய்வதாக தெரிவித்து உள்ளார்.

பின்னர் ஜெர்மனியில் சூர்ய குமார் போஸ் செய்தியாளர்களிடம் பேசியபோது “ தன்னால் முடிந்தவரையில் இந்த விஷயத்தில் கவனம் செலுத்துவதாக  பிரதமர் மோடி தெரிவித்தார். இவ்விவகாரத்தை கருத்தில் கொள்வதாகவும், எதாவது செய்வதாகவும் வாக்குறுதியாவது அளித்து உள்ளார். நானும் நம்பிக்கையாக உள்ளேன். என்று கூறினார்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக ரகசியமாக பராமரித்து வரும் நேதாஜி குறித்த ரகசியங்களை வெளியிட்டால் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும், நமது நட்பு நாடுகள் சிலவற்றுடன் உறவுகள் பாதிக்கப்படும் என்பதால் அந்த கோப்புகள் பகிரங்கமாக வெளியிடப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேதாஜியின் நெருங்கிய உறவினர்களான சிசிர்குமார் போஸ் , அமியாநாத் போஸ், அவருடைய ஜெர்மனி நாட்டு மனைவி எமிலி சூசென்கல் ஆகியோர் 1948 ஆம் ஆண்டு தொடங்கி, நேரு பிரதமராக இருந்த காலம் முதல் 1968 ஆம்  ஆண்டு வரையிலும்  உளவு பார்க்கப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்கள் உளவுத்துறையின் வளையத்துக்குள் இருந்தும் உள்ளனர். இவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டு இருந்தாகக்  கூறப்படுகிறது.

அண்மையில் அனுஜ் தர் என்னும் எழுத்தாளர் எழுதிய ‘இண்டியாஸ் பிக்கஸ்ட் கவர்–அவ்’ என்ற புத்தகத்தில் நேதாஜியின் மர்ம மரணம் தொடர்பான இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Leave a Reply