சுதந்திர தின விழா கொண்டாட்டம் செங்கோட்டையில் இருந்து மாறுமா? மோடியின் அதிரடி

modiநாளை மறுநாள் 68வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் முதன்முதலாக தேசியக்கொடியை ஏற்றவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அன்றைய தினம், புதிய அதிரடி திட்டங்களை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் அதே நேரத்தில் மோடி சுதந்திர கொண்டாட்ட நிகழ்ச்சியை செங்கோட்டையில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரதமர் மோடியின் முதல் சுதந்திர தின உரை என்பதால், வழக்கமான பாணியில்  இல்லாமல் நாட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வெளியிடும் சிறப்பான உரையாக இருக்க மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சுதந்திர தின விழா என்பது ஒரு வழக்க்கமான கொண்டாட்டமாக இல்லாமல் மக்களுக்கு பயனளிக்கக்கூடிய ஒரு விழாவாக இருக்கவேண்டும் என பிரதமர் விரும்புகிறார்.

மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதே தலைநகர் காந்திநகரில் கொடியேற்றாமல் மாநிலத்தின் மற்ற நகரங்களிலும் கொடியேற்றும் வழக்கத்தை கொண்டு வந்தார். அதுபோல் செங்கோட்டையில் கொடியேற்றுவாரா? அல்லது இடத்தை மாற்றுவாரா? என்பது குறித்து டெல்லி வட்டாரங்களில் விவாதம் நடந்து வருகிறது.

Leave a Reply