ஷாங்காய் மாநாட்டின்போது மோடி-நவாஸ் பேச்சுவார்த்தையா? சுஷ்மா பதில

ஷாங்காய் மாநாட்டின்போது மோடி-நவாஸ் பேச்சுவார்த்தையா? சுஷ்மா பதில

ஷாங்காய் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் கலந்து கொள்ள இருந்தபோதிலும் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசுவதற்கு வாய்ப்பே இல்லை  என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதிபட தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் அதாவது ஜூன் 8 முதல் இரண்டு நாட்கள்ல் ஷாங்காய் கூட்டமைப்பின் மாநாடு கஜகஸ்தான் நாட்டின் அஸ்டானா நகரில் நடக்கவுள்ளது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாடு குறித்த செய்தியாளர் சந்திப்பு ஒன்று சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றுப் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசுவதற்கு வாய்ப்பே இல்லை. ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டில் வைத்து இரு தலைவர்களும் சந்திப்பது குறித்து பாகிஸ்தான் தரப்பிலிருந்தும் எந்த அழைப்பும் வரவில்லை என்று கூறியுள்ளார்.

Leave a Reply