சோ இழப்பு எனது தனிப்பட்ட இழப்பு., பிரதமர் மோடி

சோ இழப்பு எனது தனிப்பட்ட இழப்பு., பிரதமர் மோடி

பிரபல பத்திரிகையாளர் சோ அவர்கள் துக்ளக் ஆண்டுவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. குருமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ரஜினிகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் உரையாற்றினார்

இந்த விழாவில் அவர் கூறியதாவது, ‘எனது நெருங்கிய நண்பரான சோ ராமசாமி அவர்களுக்கு துக்ளக் பத்திரிகையின் 47வது ஆண்டு விழாவில் அஞ்சலி செலுத்துகிறேன். சோ அவர்கள் என்னோடு பழகிய அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தார். ​துக்ளக் விழாவில் என்னுடைய நண்பர் சோவுக்கு மரியாதை செலுத்துகிறேன். ​ சோவின் இழப்பை தனிப்பட்ட இழப்பாக கருதுகிறேன். இந்திய அரசியலை சோவின் பெயரில்லாமல் எழுத முடியாது. பிரிவினைவாத சக்திக்கு எதிரான ஆயுதமாக துக்ளக் இதழை சோ விளங்கச் செய்தார். ஒரே வரி, கருத்து சித்திரம் மூலம் ஆழமான கருத்துகளை பதிவு செய்தவர் சோ”  என்று புகழாரம் சூட்டினார்.

Leave a Reply