தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய பொது பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி உள்பட அனைத்து அமைச்சர்களும், எம்.பிக்களும் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பாராளுமன்றத்தின் கேண்டீனில் ரூ.29 கொடுத்து பிரதமர் மோடி மதிய உணவு சாப்பிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
நேற்றைய பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பாரத பிரதமர் மோடி, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் 70-ல் இயங்கி வரும் உணவகத்திற்கு நேற்று மதியம் அங்கு சென்ற சென்ற மோடி ரூ.29 கொடுத்து மதிய உணவை சாப்பிட்டார். அவர் சைவ உணவை சாப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் பாராளுமன்ற கேண்டீனில் உள்ள விருந்தினர் வருகை பதிவேட்டிலும் தனது கருத்தை எழுதி கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது அங்கு குழுமியிருந்த எம்.பி.க்களுடன் சகஜமாகபிரதமர் கலந்துரையாடியதை கேண்டீனில் உள்ள ஊழியர்கள் ஆச்சரியமாக பார்த்தனர். மற்ற கட்சி எம்.பிக்களும் பிரதமர் மோடி நாடாளுமன்ற கேண்டீனுக்கு வந்து உணவு சாப்பிட்டதை வியப்புடன் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.