பிரதமர் மோடியுடன் நாட்டு மக்கள் அனைவரும் நேரடியாக தொடர்பு கொண்டு பேசும் வகையில் புதிய ஆப்ஸ் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷனுக்கு ‘மோடி ஆப்ஸ்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பிரதமர் மோடி இந்த அப்ளிகேஷனை அறிமுகம் செய்தார்.
பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வரும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ள நரேந்திர மோடி, தொழில்நுட்பங்கள் மூலம், மத்திய அரசின் செயல்பாடுகள் சாதாரண பொதுமக்களுக்கு தெரிய வேண்டும் என்றும், பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.
இதனை செயல்படுத்த கடந்த ஆண்டு ஜூலை மாதம் ‘எனது அரசு’ என்ற இணையதளத்தை மோடி தொடங்கினார். அதேபோல், தனது சமூக வலைதளங்களான ஃபேஸ் புக் மற்றும் டுவிட்டர் மூலமும் அரசின் செயல்பாடுகளை பிரதமர் நரேந்திர மோடி பதிவு செய்து வருகிறார். இதன்மூலம் பொதுமக்களின் கருத்துக்களைகேட்டு வரும் பிரதமர் தற்போது புதிய ஆப்ஸை, அவர் தொடங்கியுள்ளார். இந்த ஆப்ஸை ஆண்ட்ராய்டு வசதியுள்ள செல்போன்களில் டவுன்லோடு செய்து கொண்டு மத்திய அரசின் செயல்பாடு குறித்து தேவையான தகவல்கள், இ-மெயில்கள் மற்றும் மான்கிபாத் வானொலி பேச்சுக்களையும் பெறலாம். மேலும் பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளையும் இந்த ஆப்ஸ் மூலம் தெரிவிக்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த புதிய ஆப்ஸ்-க்கு பல்வேறு தரப்பில் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..