கடந்த மாதம் நடைபெற்ற இந்திய குடியரசு தினவிழாவின் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா வருகை தந்திருந்தபோது மோடி ரூ.10 லட்சம் மதிப்புள்ள கோட் அணிந்திருந்ததாக சர்ச்சைக்குரிய ஒரு தகவல் ஊடகங்களில் வெளியாகியது. இந்த கோட் இன்று ஏலம் விடப்படவுள்ளதாகவும், இந்த ஏலத்தில் கிடைக்கும் தொகை கங்கையை தூய்மைப்படுத்தும் பணிக்கு பயன்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
மோடியின் கோட் மட்டுமின்றி அவர் பிரதமராக பதவியேற்ற பின்னர் பெறப்பட்ட 455 பரிசுப்பொருட்களும் இந்த ஏலத்தில் பங்குபெறவுள்ளது.
இந்த ஏலம் எஸ்எம்சியின் அறிவியல் மாநாட்டு மையத்தில் நடைபெறும். சூரத்தில் இந்த ஏலத்தை நடத்த பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கு முன்னர் மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது அவருக்கு கொடுக்கப்பட்ட பரிசுப்பொருட்களை ஏலம் விட்டு அதில் கிடைத்த தொகையை பெண் குழந்தைகளின் கல்விக்கு கொடுத்தார் என்பது அனைவரும் அறிந்ததே.