நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றவுடன் ஆரம்பிக்கப்பட்ட பிரதமர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கம் நான்கு நாட்களில் 12 லட்சம் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே பிரதமர் அலுவலகத்தின் டுவிட்டர் பக்கத்தில் 14 லட்சம் ஃபாலோயர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி மக்களின் கருத்துக்களை கேட்பதில் மோடிக்கு குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் இருந்தே வழக்கம் என்பதால் அதை பிரதமர் ஆனதும் தொடருவதற்கு முடிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி தனது அமைச்சர்களுக்கும் அவர் இந்த யோசனையை அறிவுறித்தியுள்ளார்.
புகையிலை சம்மந்தமான மோடி ஃபேஸ்புக்கில் தெரிவித்த கருத்துக்கு ஆயிரக்கணக்கான லைக்குகளும், நூற்றுக்கணக்கான யோசனைகளும் அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடியின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கம் இதுதான். https://www.facebook.com/PMOIndia. நீங்களும் அவருடைய பக்கத்தை லைக் செய்து பிரதமரின் கருத்துக்களை அவ்வப்போது ஃபேஸ்புக் மூலம் அறிந்துகொள்ளுங்கள்.