பாமகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் மாற்றம். ஜி.கே.மணி அறிக்கை.

14பாமகவின் சிதம்பரம் தொகுதி வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது சம்மந்தமாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் சிதம்பரம் தொகுதி பாமக வேட்பாளர் மணிரத்னத்தின் வேட்புமனு சில காரணங்களால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அவரது மனைவி சுதாவின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. எனவே பாமகவின் அதிகாரபூர்வமான வேட்பாளராக சுதா நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாமகவினரும், தேசிய ஜனநாயக கூட்டணியினரும், ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் வி.சுதா  நாட்டார்மங்கலம் ஊராட்சித் தலைவராக சிறப்பாக பணிபுரிந்த அனுபவம் உள்ளவர் என்றும், அந்த பகுதியின் அடிப்படை வசதிகளை மிகச்சிறப்பாக செயல்படுத்தி அந்த பகுதி மக்களின் அன்புக்கு பாத்திரமானவர் என்பதால் அவரை மக்களவைக்கு தேர்ந்தெடுத்தால், சிதம்பரம் தொகுதியின் வளர்ச்சிக்கு அவர் பெரும் பங்களிப்பார் என பாமக சார்பில் உறுதி கூறப்படுகிறது என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply